எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் – அமைச்சர்

பேருந்துகள் மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் தேவைகளை கண்டறியும் கலந்துரையாடல் நேற்று (09) போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்குமான எரிபொருள் தேவைகளை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் அளவுகள் தொடர்பான தரவுகள் கிடைத்தவுடன் அமைச்சு அடுத்த வாரத்திற்குள் தனி QR குறியீட்டில் கூடுதல் ஒதுக்கீடுகளை ஒதுக்கும் என்று எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.