crossorigin="anonymous">
பொது

மத்தள விமான நிலைய அதிகாரிகள் பணி புறக்கணிப்பு

ஹம்பாந்தோட்டை – மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து இன்று (12) விலகத் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள், சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வழியை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ஊடக இன்று (12) அதிகாலை நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தபோது அங்கிருந்த பயணி ஒருவரினால் கடும் எதிர்ப்பு காரணமாகவும் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவரது ஆவணத்தை பரீட்சிக்க மறுத்தமையினாலும் அவரது பயணம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − 95 =

Back to top button
error: