crossorigin="anonymous">
பொது

ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஜூலை 10

ஹிஜ்ரி 1443 துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டது

இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஜூலை 10 ஆம் திகதி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (30) இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1443 துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (30) இலங்கையில் சில பகுதிகளில் தென்பட்டுள்ளதுடன் அதற்கமைய, துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − = 63

Back to top button
error: