crossorigin="anonymous">
பொது

கட்டார் எரிசக்தி அமைச்சரை இலங்கை எரிசக்தி அமைச்சர் சந்திப்பு

கட்டார் எரிசக்தி துறையின் உதவியோடு இலங்கையின் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க கட்டார் நாட்டின் எரிசக்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரும், கட்டார் எரிசக்தியின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷாட் ஷெரிடா அல் காபியையும், இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (28) சந்திந்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (28) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்குறிப்பிட்ட விடயத்தை இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

பெற்றோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்துக்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி பற்றி, அபிவிருத்திக்கான கட்டார் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பொருட்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடன் வசதிக்கான கோரிக்கையை பரிசீலித்து சர்வதேச நாணய நிதிய திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரஅமைச்சர் காஞ்சன ஆகியோர் நேற்று கட்டாருக்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 − = 34

Back to top button
error: