crossorigin="anonymous">
பிராந்தியம்

கரடி தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் காட்டு பகுதியில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கரடி தாக்குதல் சம்பவம் நேரு முன்தினம் 17) கொக்காவில் காட்டு பகுதியில் உள்ள பெண்கள் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கரடி தாக்குதல் சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 38 வயதுடைய சிவபாலகிருஸ்ணன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விறகு வெட்ட சென்றவரையே இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கரடி தாக்குதலுக்குட்பட்ட நபரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சையின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 54

Back to top button
error: