crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் இயந்திரம் அன்பளிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதியொன்றினை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரனையோடு இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலேசியாவில் இயங்கி வரும் சமூக நல அமைப்பான அலாகா தொண்டு நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் 11 மில்லியன் பெறுமதியான பீ.சி.ஆர் இயங்திரத்துடன் உப இயந்திர சாதன தொகுதியொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த ஆகியோர் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் மனிதநேய செயற்பாட்டிற்காக மாவட்ட மக்களின் நன்மை கருதி பாரியதொரு நிதிப் பங்களிப்பின் மூலமாக பீ.சி.ஆர் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதியை பெற்றுக்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரனையோடு இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்திற்கு மாவட்ட கொவிட் செயலணி இதன்போது நன்றி தெரிவித்து பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு கரீத்தாஸ் எகட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி ஜேசுதாசன், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை ராஜன் ரொகான் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் பொருளாளர் மொகமட் இக்பால், தட்சன் அம்பலவாணர், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் இணைப்பாளர் கிறிட்டி, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள் உள்ளிட துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 77 = 84

Back to top button
error: