crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முன்பள்ளிகளை அடிப்படை தராதரத்திற்கு உயர்த்தும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பிரதேச செயலரின் வேண்டுகோளிற்கிணங்க றகமா நிறுவனத்தினரினால் முன்பள்ளிகளை அடிப்படை தராதரத்திற்கு உயர்த்தும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செல்வபுரம் சுஜாத் முன்பள்ளி மற்றும் பூவரசன்குளம் அன்ரனி முன்பள்ளி ஆகியவற்றுக்கு நேற்று (13) வெள்ளிக்கிழமை தளபாட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

நட்டாங்கண்டல் மாறன் முன்பள்ளி சிறார்களிற்கான குடிநீர் திட்டமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியேகத்தர், றகமா நிறுவன அணித்தலைவர் மற்றும் உத்தியேகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − = 76

Back to top button
error: