crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீனாவின் சினோபாம் கொவிட்-19 தடுப்பூசி ஒரு மில்லியன் டோஸ்கள் வந்தடைந்தது

சீனாவின் சினோபாம் (Sinopharm) கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இன்று (04) கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளதுடன் இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்திருந்தன.

அண்மையில் சீனா அன்பளிப்பு செய்த 5 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளிட்ட, கடந்த மார்ச் மாதம், சீனாவிடமிருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 6 இலட்சம் சினோபாம் (Sinopharm) டோஸ் தடுப்பூசிகளுடன் இதுவரை மொத்தமாக 5.1 மில்லியன் சினோபாம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 4 =

Back to top button
error: