crossorigin="anonymous">
உள்நாடுபொது

வைத்திய அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிப்பு

இலங்கையில் அரச சேவையிலுள்ள சகல தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு நேற்று (30) வெளியிட்டது.

முன்னதாக அரச சேவையில் அனைத்து தரங்களின் வைத்திய அதிகாரிகளுக்குமான கட்டாய ஓய்வு வயது 60 ஆக காணப்பட்ட நிலையில , இது கடந்த ஆண்டு 61 ஆக நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 20 ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன் வைத்திய அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு நேற்று (30) பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − 47 =

Back to top button
error: