crossorigin="anonymous">
உள்நாடுபொது

பலஸ்தீன் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல்

“பாலஸ்தீன விவகாரத்தில் உலகின் தோல்வியும்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்”

பலஸ்தீன் காசாவில் இடம்பெறுகின்ற போர்க்குற்றங்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் மற்றும் மக்களை கொன்று குவிப்பதைத் தடுப்பதில் உலகத் தோல்வியின் தாக்கங்களும் அதனுடன் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களும் தொடர்பான கலந்துரையாடலொன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இன்று (15) ஏற்பாடு செய்திருந்தது

“பாலஸ்தீன விவகாரத்தில் உலகின் தோல்வியும்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல் கொழும்பு 10, இல. 310, டி ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இக் கலந்துரையாடலில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். செய்ட், இலங்கை ஜ.நா அலுவலக முன்னாள் தேசிய தகவல் அதிகாரி மொஹான் சமரநாயக்க, சமூக ஆர்வலர் எம்.என் முஹம்மட் ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 − = 69

Back to top button
error: