crossorigin="anonymous">
உள்நாடுபொது

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்த நடவடிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் வர்த்தமானி வௌியிட்டுள்ளார்.

09 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலத்திரனியல் உபகரணங்கள், உடற்சுகாதார பொருட்கள், உணவுப்பொருட்கள், நிர்மாண பணிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளே தளர்த்தப்பட்டுள்ளன.

டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் இறக்குமதிகள் தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 82 = 86

Back to top button
error: