
இலங்கை பொலிசாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக பிரதேச உயர் பொவிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.