crossorigin="anonymous">
பொது

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் கருத்தரங்கு

முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர் கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

“தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?” என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு மருதானையில் உள்ள (AMYS) அஷ்- ஷபாப் தலைமையகத்தில் நடைபெறும்.

AMYS அமைப்பின் அனுசரணையில் இடம் பெறும் இக்கருத்தரங்கில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 25 மாவட்ட இணைப்பாளர்களும் கலந்து கொள்வர்.

விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட செயற்குழு உறுப்பினருமான எம்.பி.எம். பைரூஸ் நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொள்கிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், அஷ்-ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிமும் கலந்து சிறப்பிக்கிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்ற மாவட்ட இணைப்பாளர்களுடனான கூட்டமும் மற்றும் செயற்குழு கூட்டமும் இதனை அடுத்து நடைபெறும் என அமைப்பின் பிரதிச் செயலாளர் சாதிக் சிஹான் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 82 =

Back to top button
error: