crossorigin="anonymous">
பொது

இலங்கையில் பகுதி சூரிய கிரகணம் காணும் வாய்ப்பு

இலங்கையில் இன்று (5) பகுதி சூரிய கிரகணத்தை காணக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பிற்பகல் வேளையில் நாட்டின் சில பிரதேசங்களில் இந்த சூரிய கிரகணம் தென்படும். மாலை 5.27 மணி முதல் யாழ்ப்பாணத்தில் 22 நிமிடங்களும்இ கொழும்பில் 5.43 முதல் 9 நிமிடங்களும் சூரிய கிரகணம் தென்படும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் தென் பகுதியில் சூரிய கிரகணத்தை காண முடியாது. இலங்கையில் மீண்டும் ஐந்து வருடங்களின் பின்னரே சூரிய கிரகணம் தோன்றும் என்றும் பேராசிரியர் சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.

முழு நிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. சூரியனின் தோற்றத்தை நிலவு முழுமையாக மறைத்துவிடும். இது முழு சூரிய கிரகணமாகும்.புற நிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும்.

புற நிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் காண்பர். மீதப் பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரிய கிரகணமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 − = 74

Back to top button
error: