crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அரசுக்கு சொந்தமான மூன்று இணையத்தளங்கள் ஊடுருவல்

இலங்கை அரசுக்கு சொந்தமான முக்கிய மூன்று இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதுடன் சீனாவிற்கான இலங்கை தூதரகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவலை சந்தித்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறதுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலேயே, இந்த இணையத்தள ஊடுருவல் நடந்துள்ளது.

கடந்த காலங்களிலும் மே 18ஆம் திகதி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என கூறுவோரால் பல இணையதளங்கள் ஊடுருவப்பட்டிருந்தன. தற்போது அந்த இணையதளங்கள் மீட்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 + = 72

Back to top button
error: