crossorigin="anonymous">
பொது

13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிப்பு

14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை தினம்

இலங்கையில் போக்குவரத்து சிரமங்கள், மின்சாரம் தொடர்பான சிக்கல்களை கருத்திற் கொண்டு இம்மாதம் எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேவினால் குறித்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) விடுமுறை தினமாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பொசொன் பெளர்ணமி தினமான ஜூன் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏற்கனவே விடுமுறை தினமாக உள்ள நிலையில், வார இறுதி நாட்களுடன் இணைந்தவாறு திங்கட்கிழமை 13 ஆம் திகதி தினத்தையும் விடுமுறை தினமாக அறிவிக்க்பபட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 − = 69

Back to top button
error: