crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தல் பட்டியல் தகவல்களை தேர்தல் ஆணைக்குழு இணையதளத்திலிருந்து பெறலாம்

தேர்தல் பட்டியல் தகவல்களை கிராம உத்தியோகத்தரிடமும் பெறலாம்

2022ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான தேர்தல் பட்டியல் தகவல்களை குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பட்டியல் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை 2022ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பட்டியல் தகவல்களை இவ்வாறு பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை கிராம உத்தியோகத்தரிடம் அல்லது வேறு அதிகாரிகளிடமோ உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 + = 80

Back to top button
error: