crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் – ஹரின் பெர்னாண்டோ

அரசாங்கம் கவிழும் வரை எதிர்க்கட்சிகள் ஓயாது என்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

மகாசங்கம், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட முழு நாடும் தற்போது அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கண்டியில் இருந்து ஆரம்பமான பேரணியானது பிரதான வீதியூடாக கொழும்பை வந்தடையும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போது பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன எனவும் குறிப்பிடடார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: