crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரம்புக்கனை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம், பலர் காயம்

கேகாலை – ரம்புக்கனையில் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணமடைந்து பலர் காயமடைந்துள்ளனர் அத்துடன் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பலர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையைத் அடுத்து, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − 91 =

Back to top button
error: